புதன், 23 மார்ச், 2016

தமிழ் இலக்கியத்தில் உயிரியல் சிந்தனை


உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதை தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப் பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல் தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய், ''ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனோடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே ஆறு அறிதுவே அவற்றொடு மனனே நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ...' ..தொல் பொருள் மரபியில்:29. உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவரதாங்கள். அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியை பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம். டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். இந்த மூன்று அவதாரங்களை கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது. மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை, எந்த காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம் என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி. மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச் சரியாக விடுபட்ட [ மிஸ்ஸிங் லிங்க் ] இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது. ''மிஸ்ஸிங் லிங்க் ''என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். '' விட்டுப்போன கண்ணி '' குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது. டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டு. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக 1.' மச்ச அவதாரம்' என்று மிகச் சரியாக காட்டியுள்ளது. 2. 'கூர்ம அவதாரம்' [மை வடிவம்]. 3. 'வராக அவதாரம்' 4.காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு 'சிம்மாவதாரம்'. 5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான 'வாமன அவதாரம். 6வது பரசுராம அவதாரம், 7வது அவதாரம் இராம அவதாரம் 8வது பலராம அவதாரம். எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில் ஈட்டி, கோடாரியை பயன்படுத்திய காலகட்ட அவதாரங்கள்! வரிகளின் மூலநூல் - அறிவியல் தமிழ்.

திங்கள், 21 மார்ச், 2016

விண்ணியல் அறிவு

  • உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
  • ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி 
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் 
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.


  • பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.
  • உலகம்என்னும் தமிழ்ச்சொல் “உலவு” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும்.
  • ஞாலம் என்னும் சொல் “ஞால்” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் “தொங்குதல்”.
  • வானத்தில் காற்றில்லாப் பகுதி உண்டு என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனை “வறிது நிலைஇய காயமும்” என்னும் புறநானூறு வரி விளக்குகிறது.
  • “வலவன் ஏவா வானூர்தி” என்னும் புறநானூற்றுத் தொடரினால் தமிழர்கள் வானூர்தியை விண்ணில் செலுத்தி இருக்கலாம் என அறியப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் புவி வெப்பமாதலும் பருவநிலை மாறுபாடும்

சங்கப் பாடல்களுள் பாலைத் திணைப் பாடல்களில் பயின்றுவரும் பாலை நிலக்காட்சிகள் "நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல்' கருத்தாக்கத்துடன் ஒப்புநோக்கத் தக்கவையாக உள்ளன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுதொட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளதைக் காண்போம்.


கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
(அகம் 164:1-3)


என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினை எல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால், இப்பரந்த பூமியானது வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையுமென எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்துபோகுமாறு தாக்கும் கொடும் வெப்பத்தால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெம்மைக் காற்றினால் உதிர்ந்துபோகும். அதன்பின், அம்மரத்தின் நீண்ட கிளைகளாவன வறுமையுற்றவரைப் போல வளமற்று விளங்கும் என்பதை,


... ... ... ...கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு
(அகம் 143:1-5)


என்ற பாடல் விளக்குகிறது. இதுதவிர, மற்றொரு அகப்பாடல் (அகம் 185:8-10) மூலம், பசுமையற்றுப்போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால், உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வான் உலர்ந்து, மழையானது பொழியும் இடத்தைவிட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,


உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில் (அகம் 141:5-6)


என்று உழவுத்தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், தொழில்களுள் தலையாயது உழவுத்தொழிலாகும். அவ்வுழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை. அம்மழையானது புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும், பருவம் மாறிப் பொழியவும் காரணமாகிறது.
ஆக, புவிவெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் ஏற்படுகின்றன. அன்று இயற்கையானது மனிதனுக்கு எளிதில் வெற்றி கொள்ள முடியாததாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். மனிதச் சமூகம் இயற்கைக்குப் பேரிடராக உள்ளது. சான்றாக, காதல் கருத்தொருமித்த தலைவன், தலைவியரிடையே இப்பருவகால மாற்றம் தோற்றுவிக்கும் துயர் அளப்பரியது என்பதைக் குறுந்தொகை (382:4-6) பாடல் வாயிலாக உணரவியலும். இவை அனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை.
ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் சுவைக்காது, அவற்றின் உள்ளீடாகக் காணப்படும் அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்ச்சியை உணர்வோமேயானால் புவிக்கோளத்தைப் பேரழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவியலும்.